சின்ன பையன்… ஆனா எனக்கு சீனியர் – சிவகுமார்

ஓ மை டாக் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகுமார், சின்ன பையன்… ஆனா எனக்கு சீனியர் என்று பேசியிருக்கிறார்.

விஜய குமார், அருண் விஜய், ஆர்னவ் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஓ மை டாக். இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்கி இருக்கிறார். 2 டி எண்டர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா ஜோதிகா தயாரித்து இருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் விஜய குமார், அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சிவகுமார் பேசும் போது, ஓ மை டாக் திரைப்படத்தை இயக்கி இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரே படத்தில் அப்பா மகன் பேரன் நடிக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. தெலுங்கில் நாகார்ஜூனா குடும்பத்திற்கு பிறகு, தமிழில் விஜயகுமார் குடும்பத்திற்கு அமைந்திருக்கிறது.


நானும் விஜயகுமாரும் நீண்டகால நண்பர்கள். என்னை விட நான்கு வயது சிறுவன். ஆனால் நடிப்பில் எனக்கு சீனியர். நிறைய படங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார் என்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!