முன்னாள் மனைவி மீது புகார் அளித்த இசையமைப்பாளர் டி,இமான்- என்ன விஷயம் தெரியுமா?

தமிழ் சினிமா கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான்.
இவரது இசையமைப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி இருந்தது. அதேசமயம் அவரது பற்றிய இன்னொரு செய்தியும் அண்மையில் வெளியாகி இருந்தது.

மனைவியுடன் விவாகரத்து
டிஇமான் 2008ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

ஆனால் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் நவம்பர் 2020ல் விவாகரத்து செய்துள்ளார்கள். இதன டி.இமானே தனது சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.

மனைவி மீது புகார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மனைவி மீது டி.இமான் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மனைவி குழந்தைகளுக்கு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பதிவு செய்துள்ளார் என புகார் அளித்துள்ளார். தற்போது இமானின் முன்னாள் மனைவி மோனிகாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!