“பீஸ்ட்” படத்தின் பெயரை மாற்றிய படக்குழு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் பெயரை படக்குழு மாற்றியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். 

இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 3 மொழிகளிலும் இந்த படத்தின் பெயர் பீஸ்ட் என்றே அந்தந்த மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் இந்தி பெயர் மட்டும் மாற்றப்பட்டு இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பீஸ்ட் படத்தை இந்தியில் ‘ரா’ என்ற பெயரில் வெளியிட உள்ளனர். 


இந்தியாவின் ரா உளவு அமைப்பை குறிக்கும் வகையில் தான் இப்படி பெயர் சூட்டப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த பெயர் மூலம் நடிகர் விஜய் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!