முதல் முறையாக இணையும் அஜித் – விக்னேஷ் சிவன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

AK 61
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அஜித், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

முதல் முறையாக அஜித் – விக்னேஷ் சிவன் இணையவுள்ள இப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனம் லைக்கா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
அஜித் – விக்னேஷ் சிவன் – லைக்கா

இந்நிலையில், அஜித் – விக்னேஷ் சிவன் – லைக்கா AK 62 படத்திற்காக இணைவதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, படக்குழு உறுதிசெய்துள்ளனர்.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதை பார்க்க ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் ஆரபித்து, அடுத்த வருடத்தின் இடையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!