மெகாஹிட் படத்தின் 2ம் பாகம் எடுக்கும் ரஜினி? ரசிகர்கள் கொண்டாட்டம்

வெற்றி தோல்விகளை தாண்டி தற்போதும் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினி 169
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வந்த அண்ணாத்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை, இருப்பினும் அது நல்ல வசூலை தான் பெற்றது. அடுத்து அவர் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சனுக்கு அடுத்து சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ரஜினி தனது 170வது படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் உடன் கூட்டணி சேர போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படம் இந்த கூட்டணியில் 1999ல் வெளிவந்த படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனும் படையப்பா 2ல் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிகிறது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!