உலகம் முழுவதும் அஜித்தின் வலிமை படத்தின் முழு வசூல்- தெறிக்கும் கலெக்ஷன்

நடிகர் அஜித், ரசிகர்கள் அதிகம் ஒரு உதாரணமாக நினைக்கும் பிரபலம். 

எப்போதும் குடும்பம், தனது கனவை நோக்கி பயணம் செய்வது என எப்போதும் பிஸியாகவே இருப்பவர். வலிமை படம் ரிலீஸ் ஆக படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

அண்மையில் அஜித் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை குடும்பத்துடன் வெளியே சென்று கொண்டாடியுள்ளார், அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நேரத்தில் தான் வலிமை படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ரூ. 105 கோடிக்கும், இந்தியாவில்- ரூ. 122 கோடியும், மொத்தமாக உலகம் முழுவதும் முதல் வார முடிவில் படம் ரூ. 165 கோடி வரை வசூலித்துள்ளதாம். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!