இளையராஜா இசை ஒலிக்க தடை

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களின் ஒருவரான இளையராஜாவின் இசையை இரு நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரனையில் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமையுள்ளது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார் இளையராஜா.


இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி என்ற இரு இசை நிறுவனங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரனை மார்ச் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!