விஜய் அளவுக்கு அஜித்துக்கு வியாபாரம் இல்லை.. விஜய்யும், அஜித்தும் விரோதிகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்.

இதில் அஜித்தின் வலிமை படம் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது. வலிமை படம் குறித்தும், அஜித், விஜய் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தலைப்புக்கு குறித்தும் பத்திரிகையாளர் பிஸ்மி, நமது சினிஉலகம் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் வலிமை படத்தின் ப்ரோமோஷன் வேளையில் பெரிதளவில் இல்லை என்றும், வலிமை படத்தின் வியாபாரம் தயாரிப்பாளருக்கு திருப்த்தி தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரீச் ஆன அளவிற்கு கூட, அஜித்தின் படங்களுக்கு ரீச் இல்லை என்றும், விஜய்யுடைய படங்களுக்கு இருக்கும் வியாபாரம்,  அஜித்தின் படங்களுக்கு இல்லை என்றும் பிஸ்மி கூறியுள்ளார்.

 மேலும், ஆரம்பகால கட்டத்தில் நண்பர்களாக இருந்த அஜித், விஜய் இருவரும், ஒரு கட்டத்திற்கு மேல் விரோதிகளாக மாறினார்கள். பத்திரிகையாளர்களிடம் கூட, விஜய்யை பற்றி அஜித் வருத்தப்பட்டு பேசியுள்ளார் என்றும் பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!