சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல் – by priya | @ | February 5, 2022 7:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அசோக் செல்வன், அபி ஹாசன் நடிப்பில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கித்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படத்தில் ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராதன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு கமலுடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…