மீண்டும் ஹிந்தியில் நடிகை சமந்தா ! அதுவும் இந்த டாப் நடிகருடன் நடித்துள்ளாரே..

தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியடைந்துள்ள புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ஒரு பாடல் சென்சேஷனல் ஹிட்டாகியுள்ளது.

சமந்தாவின் ரசிகர்கள் அனைவரும் தற்போது அவரின் அடுத்த படத்திற்காக காத்து கொண்டு இருக்கின்றனர். அதன்படி அவர் நடிப்பில் தமிழில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது பாலிவுட் டாப் நடிகருடன் சமந்தா விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆம் சமந்தா நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ஹிந்தி விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அந்த வீடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன் சமந்தா ஹிந்தியில் நடித்த The Family Man சீரிஸ் அங்கு அவருக்கு பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!