புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் அவருடைய படத்திற்கு வழங்கிய சம்பளத்தில் 70 சதவீதத்தை புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்

1999-ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படம் `தி மேட்ரிக்ஸ்’. சயின்ஸ் பிக்சன் கதையாக வெளிவந்து வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்ததின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் கியானு ரீவ்ஸ். இதன் தொடர்சியாக மேட்ரிக்ஸ் பட வரிசையில் அடுத்த பாகமான ‘தி மேட்ரிக்ஸ் ரிசெரக்‌ஷன்’ என்ற படமும் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.


இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக  கியானு ரீவ்ஸிற்கு கிடைத்த சம்பளத்தில் 70 சதவீதத்தை லுகேமியா / ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தரவுள்ளார். கியானு ரீவ்ஸின் தங்கை கிம் கடந்த 10 வருடங்களாக புற்றுநோயை எதிர்த்து போராடி வந்த நிலையில், லுகேமியா ஆராய்ச்சிக்கு நன்கொடை அளிக்க அவர் முன்வந்துள்ளார். 55 வயதாகும் கிம் புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை குணமாக்க நடிகர் கியானு ரீவ்ஸ் அமெரிக்க மதிப்பில் 5 மில்லியன் டாலர் செலவழித்ததாக கூறப்படுகிறது.

இவர் இதற்கு முன்பு தனி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, அதன்மூலமாக நிறைய உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2020 ஜூனில் அவருடைய வருமானத்தின் பெரும்பகுதியை நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த முயற்சி அனைவரையும் ஊக்கவிக்கும் என கூறி சமூக வலைத்தளத்தில் அவரை வாழ்த்தி பகிர்ந்து வருகின்றன
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!