சிவகார்த்திகேயனின் அடுத்த பட கதை? வேண்டவே வேண்டாம் என சொல்லும் நெட்டிசன்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் முடியும் தருவாயில் இருக்கிறது. அந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் Jathi Ratnalu என்ற தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் உடன் ஒரு படத்தில் கூட்டணி சேர்கிறார். அந்த படத்தின் கதை பற்றி சில தகவல்கள் பரவி வருகிறது.

இந்த Romcom படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வெளிநாட்டு பெண் மீது காதலில் விழுவது போலவும், அவருடன் எப்படி சேர்கிறார் என்பது தான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு பெண்ணை தான் இயக்குனர் நடிக்க வைக்க போகிறார். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சிலர் “இப்படி ஒரு கதை வேண்டாம் சிவகார்திகேயன்” என அட்வைஸ் கூறி வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!