கார்த்தி, அதிதி சங்கர் நடிக்கும் விருமன் படத்தின் புதிய அப்டேட்.. சுவாரஸ்ய தகவல்

முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விருமன்.

இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து சுவாரசியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த மாத இறுதிக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர்.    
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!