அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் ! என்ன தெரியுமா?

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதால் மக்கள் அனைவரும் இப்படத்திற்கு பேராதரவை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடித்து வந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு, இப்படத்தை முக்கிய இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.

மேலும் கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியில் இதுவரை வினைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி இப்படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!