அடுத்தடுத்து பட ரிலீஸ்கள்…முன்னனி நடிகருடன் மீண்டும் கைக்கோர்க்கும் கீர்த்தி சுரேஷ் !

தமிழில் தானா சேர்ந்த கூட்டம்,பைரவா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்து முடித்திருக்கும் குட் லக் சகி வருகிற நவம்பர் 26-லும், மலையாளத்தில் மோகன் லாலுடன் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் டிசம்பர் 2-ம் தேதியும் வெளியாக இருக்கிறது.

மேலும் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்திருக்கும் சாணி காயிதம் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து ரிலீஸிற்காக காத்திருக்கும் கீர்த்தியின் படங்களை தொடர்ந்து அவர் தான் கமிட்டாகியுள்ள அடுத்த படத்தை குறித்த அப்டேடை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதன்படி மலையாளத்தில் இவர் மீண்டும் மோகன்லாலுடன் வாஷி என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் பூஜையில் கலந்துகொண்ட கீர்த்திசுரேஷ் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை பகிர்ந்திருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!