நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மோகன்லாலின் 5 படங்கள் by priya | @ | November 8, 2021 9:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, மோகன்லால் நடித்து வரும் 5 படங்களை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், மோகன்லால். இவர் நடித்த ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனால் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்கிற சரித்திர படத்தையும் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அறிவித்து உள்ளார்.இதுதவிர ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் ‘புரோ டாடி’, ‘டுவெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் புலிமுருகன் இயக்குனர் இயக்கும் படம் என மேலும் 4 படங்களையும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட அவர் முடிவு செய்துள்ளாராம்.இந்த படங்களை தியேட்டர்களில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் அனுமதி கேட்டதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் தியேட்டருக்கு பதிலாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…