அஜித்தின் வலிமை படத்தில் இடைவேளை காட்சி இப்படி தான் இருக்கும்

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து நடிக்கும் படம் வலிமை.

இப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போதோ தொடங்கப்பட்டது, ஆனால் கொரோன பிரச்சனை வர படத்தின் படப்பிடிப்பிற்கும் பெரிய சிக்கலாக அமைந்தது. பின் கொரோனா தொற்று குறைய படப்பிடிப்பு தொடங்க சிலர் படத்தில் நடிக்க வர மறுத்துள்ளனர்.

எனலே புது கலைஞர்களை வைத்து சில காட்சிகளை மீண்டும் படக்குழு எடுத்துள்ளார்கள்.
இப்படி ஒரு பிரச்சனைகளை தாண்டி படப்பிடிப்பு தற்போது முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது.

இந்த நிலையில் படத்தில் ஆக்ஷன் காட்சி இயக்குனராக இருந்துள்ள திலீப் சுப்புராயன் ஒரு பேட்டியில், வலிமை படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. இடைவேளையில் வரும் மாஸான காட்சி உள்ளது, அது வரும்போது ரசிகர்கள் விசில் பறக்கும் என்பதை தாண்டி மிகவும் அமைதியாகிவிடுவார்கள்.

என்ன இது இப்படியெல்லாம் காட்சியா என வியந்து பார்ப்பார்கள், அந்த அளவிற்கு காட்சி வந்துள்ளது என கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!