இயக்குனர் சிவாவின் அடுத்த திரைப்படம் தளபதி விஜய்யுடனா! அவரே சொன்ன தகவல்..

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ள சிவா இயக்கத்தில் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த.

பேமிலி செண்டிமெண்டாக வெளியான இப்படம் பெரிய வரவேற்பை பெற்றாலும் அதிகமாக எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சிவா அளித்துள்ள சமீபத்திய பேட்டியொன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் “அடுத்து விஜய் கூட படம் பண்ண பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு” என கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி