பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு by priya | @ | October 25, 2021 8:17 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் தயாராகும் இரவின் நிழல் படத்தை இயக்கி உள்ளார்.வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். இந்நிலையில், பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரகுமான் பார்த்திபனை பாராட்டி இருக்கிறார். இந்த மகிழ்ச்சியோடு டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ள பார்த்திபன், ‘இரவின் நிழல்’ படத்துக்கு இன்று இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. ‘இது ஒரே ஷாட்டில் தயாராகும் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்’ என்று பாராட்டி கீ-போர்டில் விரல் ஓட்டினார். வைரல் ஆகப்போகும் இசை பிரளயத்திற்காக” என்று பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிருக்கிறார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…