பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா by priya | @ | October 11, 2021 8:00 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் மூலம் பிரபல நடன இயக்குனர் டைரக்டராக அவதாரம் எடுக்க உள்ளார்.மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை பாபி ஆண்டனி இயக்க உள்ளார். நடன இயக்குனரான இவர், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார்.நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…