முன்னணி நடிகருடன் மோதும் விஷால், ஆர்யா.. படத்தின் ரிலீஸில் தீடீர் மாற்றம்

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் ஆனந்த் சங்கர்.
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த.
ஆனால், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அடுத்தமாதம் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அன்றைய தினம் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!