சுந்தர் சி மற்றும் தனுஷ் கூட்டணியில் ஒரு படமா?- கசிந்த தகவல்

தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகராக வலம் வருகிறார் தனுஷ. கொரோனா நேரத்தில் கூட அவர் நடித்த படங்கள் சில வெளியாகி இருந்தன. கடைசியாக தனுஷின் ஜகமே தந்திரம் படம் வெளியாகி இருந்தது.

அடுத்து பாலிவுட்டில் அவர் நடித்துள்ள Atrangi Re, The Gray Man என்ற ஹாலிவுட் படம் என தொடர்ந்து வெளியாக இருக்கிறது.

இதற்கு இடையில் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் என படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கு இடையில் தனுஷின் புதிய கூட்டணியில் படம் பற்றிய தகவல் வந்துள்ளது.

அதாவது சுந்தர் சி இயக்க இருக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!