தளபதி விஜய்யிடம் நடிகர் பிரித்விராஜ் கேட்க விரும்பும் கேள்வி, என்ன தெரியுமா?

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரித்விராஜ், இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்தவர்.

மேலும் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் தளபதி விஜய்யிடம் கேட்க விரும்பும் கேள்வி குறித்து பேசியுள்ளார்.

அதில் பிரித்விராஜ் “நான் அவரிடம் உங்களின் தொடர் வெற்றிக்கான மந்திரம் என்னவென்று கேட்பேன். அவருக்கு எந்த திரைப்படம் வெற்றியடையும் என நன்றாக தெரிந்துள்ளது” என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்க்கு மலையாளத்தில் பெரிய மார்க்கெட் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் தொடர்ந்து அவரின் திரைப்படங்கள் அங்கு பெரிய வசூல் சாதனை படைத்தது வருவதை பார்த்து வருகிறோம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!