தமிழ் சினிமாவின் டாப் நடிகரை இயக்கவுள்ள பா.ரஞ்சித், வெளியான சூப்பர் தகவல்..

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக உள்ளவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார், அதில் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் எந்த பெரிய நடிகரின் படத்தை இயக்குவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது பா.ரஞ்சித் அடுத்ததாக சீயான் விக்ரம் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!