ராட்சசன் ஹிந்தி ரீமேக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, யார் ஹீரோ தெரியுமா?

இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ராட்சசன்.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான இந்த சைக்கோ தில்லர் திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹிந்தி ரீமேக்கான அப்படத்திற்கு Mission Cinderella என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரீமேக்கில் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளனர். இப்பொது இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!