விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக யோகி பாபு செய்த விஷயம்- அசந்துபோன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இப்போது டிரண்டில் இருக்க கூடிய காமெடி நடிகர் என்றால் யோகி பாபு தான்.

என்ன புதுபடம் வந்தாலும் அவர் இருக்கிறார். இப்போது கூட அவரது கையில் ஒரு 10 படங்களுக்கு மேல் உள்ளது என்கின்றனர்.

முக்கியமாக அவர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி பீஸ்ட் படப்பிடிப்பில் இணைய சுமார் 500 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளார். சென்னை வருவதற்கு முந்தைய நாள் மாலை வரை படப்பிடிப்பில் இருந்த அவர் உடனே சென்னை வந்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் அடுத்தகட்டம் ரஷ்யாவில் நடக்க இருக்கிறது.

படக்குழுவினர் இம்மாதமே வெளிநாடு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!