புதிய தொழிலில் முதலீடு செய்த நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.

எப்போதும் தனது குடும்பம், நடிப்பு என தனது வேலையில் மிகுந்த கவனம் கொண்டு வருகிறார்.

அவர் இப்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்தும் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

இந்த நேரத்தில் அவரை பற்றி ஒரு செய்தி. அதாவது அவரும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சாய் வாலே ( Chai Waale) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்களாம்.

விக்னேஷ் சிவனும் முதலீட்டாளர் பட்டியலில் இணைந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!