4 இல்லை, 40 திருமணம் கூட செய்வேன்- நடிகை வனிதா அதிரடி பேச்சு

நடிகைகள் பற்றிய ஒரு செய்தி என்றால் உடனே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும்.

அப்படி தான் அண்மையில் நடிகை வனிதா விஜயகுமார் 4வது திருமணம் செய்துகொள்ள போகிறார் என செய்தி வந்தது, உடனே அடுத்த நாளே அவர் நடிகர் பவர்ஸ்டாருடன் எடுத்த புகைப்படம் வெளியாகி இருந்தது.

இதனால் கிசுகிசுக்கப்பட கடைசியில் அப்புகைப்படம பிக்கப் என்ற படத்திற்காக இருவரும் எடுத்துள்ளார்கள் என தெரிய வருகிறது.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை வனிதா பேசும்போது, 4 இல்லை 40 திருமணம் கூட செய்வேன். அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என மிகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.

வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!