ஓடிடி-யில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் படம் – அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான இரு திரைப்படங்களும் வெற்றிகண்டுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படம் வருகிற ஜூலை 16ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. தயாரிப்பு நிறுவனமே, அதனை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி வரும் ஜூலை 16 வாழ் திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!