கமலிடம் நடிகர் பகத் பாசில் கேட்க விரும்பும் கேள்வி, அதுவும் எது குறித்து தெரியுமா?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னரே தொடங்கவிருந்து, ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.

மேலும் விக்ரம் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இப்படத்தில் கமலுடன் மலையாள நடிகர் பகத் பாசிலும் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ளது குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

அதில் “நான் கமல் சார் உடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். அவரின் எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். மைக்கேல் மதன காமராஜன், குருதி புனல், குணா…என சொல்லி கொண்டே போவேன்.

அவரை செட்டில் சந்தித்த முதல் நாள் நான் அவரிடம் கேட்க விரும்புவது ஒன்று தான். இப்படி உங்களால் செய்ய முடிந்தது? ” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!