அஜித்தின் வலிமை படம் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா?- அஜித் செம மாஸ்

அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பெரிய நடிகர். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் வலிமை.

எச்.வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து அஜித் இப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவில் நடந்து வருகிறது.

இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு இந்த மாதத்தில் முடிவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்னும் படத்தின் ஃபஸ்ட் லுக் கூட வெளியாகவில்லை, அதற்குள் படத்திற்கான வியாபாரம் எல்லாம் பெரிய அளவில் முடிந்துள்ளது.

சாட்டிலைட், டிஜிட்டல் என மொத்தமாக உலகம் முழுவதும் திரையரங்கு உரிமை என்று படம் ரூ. 200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!