பிகில் பட தயாரிப்பாளருடன் கூட்டணி அமைக்கும் சிம்பு?

நடிகர் சிம்பு கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!