டாக்டர் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு… ஏன் தெரியுமா?

டாக்டர் படத்தை ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்க சம்மதித்தும், அதில் வெளியிட முடியாமல் படக்குழு தவித்து வருகிதாம்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 26-ந்தேதி படம் வெளியாகும் என்று அறிவித்து தேர்தலால் தள்ளி வைத்தனர். பின்னர் ரம்ஜான் பண்டிகையில் வெளியிட முயன்று ஊரடங்கினால் தடைபட்டுள்ளது.

இதையடுத்து டாக்டர் படத்தை ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்க சம்மதித்துள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

ஆனால் டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் அதை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர். மேலும் ஓடிடி வெளியீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!