விஷால் படத்தில் இணைந்த சென்சேஷன் பட நடிகை – யார் தெரியுமா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார்.

ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். எனிமி படத்தை தொடர்ந்து தனது 31வது படத்தை, புதுமுக இயக்குனர் சரவணன் இயக்க இருக்கிறார்.

தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார்.

தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் எனும் சென்சேஷன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகாவிற்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!