பிகில் படத்தை விட மாஸ்டர் வெற்றி படமா? இல்லை தோல்வி படமா? வெளியான மாஸ் தகவல்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.

அப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் 2021க்கு வெளியான படம் மாஸ்டர்.

இவ்விருபடங்களும் ரசிகர்கள் மத்தியிலும் பொது பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அதே போல் வசூல் ரீதியாவும் பாக்ஸ் ஆபிசில் இரு படங்களுமே ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஆனால் பிகில் படத்துடன் மாஸ்டர் படத்தை ஒப்பிடும் பொழுது எந்த திரைப்படம் வெற்றிப்படம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த நடிகரும் தயாரிப்பாளருமான திரு. சித்ரா லக்ஷ்மணன், ” பிகில் மற்றும் மாஸ்டர் படங்களின் தயாரிப்பு செலவை ஒப்பிடும் பொழுது மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை ” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!