வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார்.

ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை கங்கணா உள்ளிட்ட பல பிரபலங்கள் போர்கொடி உயர்த்தினர். இதை பார்த்த மத்திய அரசு, ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் சட்ட விதிமுறைகளை வகுத்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது, ’ஒரு விஷயத்திற்கு எதிராக மாற்று கருத்து உருவாகும்போது சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும். நமது வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது. ஓடிடி தளங்களால் ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும் கூட ஐந்து ஆண்டுகள் பொருத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!