என்னப்பா சொல்றீங்க.. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகையா..? என்ன கொடுமைடா..!!


நடிகை சன்னிலியோன் தமிழில் நேரடியாக படங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தன. இந்நிலையில், தற்போது டிஸ்கவரி சேனலில் பிரபலமான நிகழ்ச்சியான “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் நடிகை சன்னிலியோன் என்ற தகவல் வந்துள்ளது.

ஆனால், ஹிந்தி டிஸ்கவரியில் மட்டுமே இவர் தொகுப்பாளினியாக இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், டிஸ்கவரி சேனல் வட்டாரங்களிடம் விசாரித்த போது, ஹிந்தியில் சன்னிலியோன் நிகழ்சிக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து அந்த நிகழ்ச்சியை பிற மொழிகளில் டப் செய்வது குறித்து யோசனை செய்யப்படும் என கூறுகிறார்கள்.


இது குறித்து நடிகை சன்னி லியோன் கூறுகையில், புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கப்போகிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் நான் இன்னும் பிரபலமாவேன்

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் என்னை பார்த்திராத ரசிகர்களிடம் நான் பிரபலமாக இது உதவும், அதன் மூலம் இந்த நிகழ்ச்சியை பார்த்திராதவர்களும் இதனை பார்க்கவும் வைக்க முடியும்” என சில்லறையை சிதறவிடுகிறார் சன்னி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!