தமிழில் படமாகும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு.. கதாநாயகி யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் நடனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் தமிழில் வெளியான, வண்டிச்சக்கரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் கால்பதித்தார் நடிகை சில்க் ஸ்மிதா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல்வேறு மொழிகளில் நடித்து தென்னிந்திய அளவில் புகழ் பெற்றார் சில்க் ஸ்மிதா. திரையுலகில் இருந்தும் ரசிகர்கள் மனதில் இருந்தும், இதுவரை அளிக்க முடியாத நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் சில்க் ஸ்மிதா.

இந்நிலையில் புகழ் பெற்ற நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க முடிவெடுத்துள்ளார்களாம். அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில், தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் நடிக்க போகிறாராம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ’புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ், சில்க் சுமிதாவின் தோற்றம்” என்று தன் படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் இதற்கு முன்பே ‘டர்ட்டி பிக்சர்’ எனும் தலைப்பில் பாலிவுட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஹிந்தி நடிகையாக வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்துள்ளார். இப்படம் 2011ஆம் ஆண்டு வெளியான சமையத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!