ரஜினியின் திரை வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? தீடீர் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்

இந்திய சினிமா அளவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை சம்பாதித்து வைத்திருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினியின் 40% காட்சிகள் இன்னும் எடுத்து முடிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

இதனால் அண்ணாத்த படம் தான் ரஜினியின் கடைசி படமாக அமையும் என்று தெரியவந்துள்ளது. அண்ணாத்த படத்தை தவிர கைவசம் வேறு எந்த படத்தில் இவர் கமிட்டாகவில்லை.

இதனை வைத்து பார்க்கும் பொழுது அண்ணாத்த படம் தான் ரஜினியின் திரை வாழ்க்கையில் கடைசி படமா? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

எதுவாக இருப்பினும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் ரஜினியின் திரை வாழ்வின் முடிவு என்னவென்று..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!