திரையரங்கா, OTTயா விஜய்யின் மாஸ்டர் படக்குழு திட்டவட்டம்- ரசிகர்களே இதான் நடக்கப்போகுது

கடந்த சில நாட்களாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் OTT தளமான பிரைம் வீடியோவில் படம் வெளியாக இருப்பதாக பேசப்பட்டு வந்தது.

இதனால் தளபதி ரசிகர்கள் அப்போது திரையரங்கில் கொண்டாட முடியாதா என மிகவும் வருத்தப்பட்டார்கள். படக்குழு பிரைம் வீடியோவினரிடம் படத்தை விற்க பெரிய தொகை பேசி இருப்பது உண்மைதானாம்.

ஆனால் படம் திரையரங்கில் வெளியான பிறகு தான் OTT தளத்தில் பிரைம் வீடியோவில் வெளியாகிறதாம். இந்த தகவலை படக்குழு தற்போது அறிவித்துள்ளனர்.

இந்த தகவல் தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!