தனுஷின் அடுத்த பட கதை, இயக்குனர் பற்றி வெளிவந்த தகவல்

நடிகர் தனுஷ் தான் கமிட்டாகியுள்ள Atrangi Re என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். லாக் டவுன் எல்லாம் முடிந்து அவர் நடிக்க ஆரம்பித்த முதல் படம் இதுதான்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது, விரைவில் முடிவடைய இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த பட இயக்குனர் மற்றும் கதை பற்றி விவரம் வெளியாகியுள்ளது. அதாவது அவர் ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.

அப்படம் Sci-Fi கதை என்று கூறப்படுகிறது, விரைவில் படம் குறித்து முழு விவரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!