நடிகர் விஷாலின் திருமணம் நின்றதற்கு இதுதான் காரணமா?- பிரபலமே வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் விஷால்-ஆர்யா, இப்போதும் அப்படி தான் உள்ளார்கள்.

இருவரும் நடிகர் சங்க கட்டடம் முடிந்த பிறகு தான் எங்களுக்கு திருமணம் என்றெல்லாம் ஜாலியாக கூறியிருப்பார்கள். ஆர்யா-சயீஷாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நடிகர் விஷாலுக்கு அனிஷா என்ற தொழிலதிபரின் மகளுடன் ஆகஸ்ட் 23, 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதன்பிறகு விஷால் திருமணம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் விஷாலின் திருமணம் நின்றுவிட்டதாகவும், அவர் நிச்சயதார்த்ததிற்கு பிறகும் லட்சுமி மேனனுடன் தொடர்பில் இருந்ததால் திருமணம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

விஷாலும், லட்சுமி மேனனும் காதலிக்கிறார்கள் என்று ஏற்கெனவே கிசுகிசுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!