அமெரிக்கா அதிபரை மிஞ்சிய தளபதி விஜய்.. கொண்டாடும் ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் வெளிவர காத்திருக்கிறது.

இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். நேற்று இப்படத்தின் டீசர் தீபாவளி வெளிவரும் என்று அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் ஜோ பைடன். இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய விஷயத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.

அதனை மாஸ்டர் அப்டேட்டுடன் ஒப்பிட்டு எது அதிக லைக்ஸ் பெற்றுள்ளது என்று கணக்கெடுப்பு எடுத்துள்ளனர் ரசிகர்கள். அதில் மாஸ்டர் வாங்கியுள்ள லைக்ஸை விட அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் பதிவிட்டிருந்த பதிவு குறைவாக பெற்றுள்ளது.

இதனை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!