வலிமை படக்குழு எடுத்த அதிரடி முடிவு! நீக்கப்படும் காட்சி? இப்படி ஒரு சோதனையா

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித், இயக்குனர் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுவந்தது. இதற்கான ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தனி செட் அமைக்கப்பட்டது.

கொரோனா எதிரொலியால் படப்பிடிப்புக்கு தடை நிலவியது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த 5 மாத காலமாக படப்பிடிப்புகளை சகஜமாக எடுக்க முடியாத சூழல் நிலவிவருகிறது.

அண்மையில் படக்குழு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியது. வெளிநாட்டிலும் சில முக்கிய காட்சிகளை எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இயக்குனர் வினோத் சர்வதேச சண்டை கலைஞர்களை கொண்டு முக்கிய காட்சிகளை படமாக எடுக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். தற்போது வெளிநாட்டிலும் கொரோனா சூழ்நிலை சரியாகததால் அம்முயற்சியை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!