கிறிஸ்டியானோ ரொனால்டோவாக மாற ஆசைப்பட்ட நடிகர் சிம்பு, ஜிம் ட்ரைனர் கூறிய சுவாரஸ்யமான தகவல்..

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துவருகிறார், இப்படத்திற்காக செம பிட்டாக மாறியுள்ளார் சிம்பு.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டானது, மேலும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட நாட்களாக நடிகர் சிம்புவை பழைய தோற்றத்தில் பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருந்த அவரின் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில், தனது உடலில் உள்ள 30 கிலோ வரையிலான எடையை குறைத்துள்ளார்.

இது குறித்து அவரின் ஜிம் ட்ரைனர் மேலும் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அது என்னவென்றால் நடிகர் சிம்பு, உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகைப்படத்தை காண்பித்து இவரை போன்ற ஒரு உடலமைப்பைக் கொண்டிருக்க விரும்பியுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!