அந்த நடிகையை போல் படுமோசமாக நடிக்க மாட்டேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியது இவரையா..!

திரையுலகில் பலராலும் விமர்சனம் செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆம் தனது ஆரம்பகால கட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் உருவத்தை வைத்து பலரும் கேலி செய்தனர்.

ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார் கீர்த்தி சுரேஷ். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான மாகாநட்டி திரைப்படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது தென்னிந்திய திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது.

சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் பல சுவரஸ்ய விஷயங்களை பகிர்ந்து வந்தார்.

அதில் ” நான் நடிகை த்ரிஷாவின் காலடிகளை பின்தொடர்ந்து திரையுலகில் பயணம் செய்யவேண். ஆனால் நடிகை த்ரிஷாவை போல் படுமோசமாக உடலை காட்டி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ” என்று தெரிவிக்கின்றனர்.

15 ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக விளங்கி வரும் த்ரிஷவை, நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி பேசியுள்ளது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!