ரஜினியை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த முக்கிய நபர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி தான் பலருக்கும் பேச்சு. டீக்கடை பெஞ்ச்களிலும், பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் அது குறித்த விமர்சனங்களை பார்க்க முடிகிறது.

அண்மையில் ரஜினியின் உடல் நிலை குறித்து அவரே அறிக்கை வெளியிட்டதாக தகவல் சுற்றி வந்தது. இந்நிலையில் ரஜினி உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகையை விரும்பாத சிலரும், போட்டியாக நினைக்கும் சிலரும் அவரின் வருகையை எதிர்த்தவர்களும் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது தான் நல்லது என கூறினர்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆதங்கம் ரஜினியிடம் உள்ளது. 40 ஆண்டுகளாக தமிழக மக்களோடு கலந்தவர் அவர். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என திருச்செந்தூரில் பேட்டியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!