வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துவிட்டு வந்துட்டேன்- பிரபல நாயகி போட்ட டுவிட், குஷியான ரசிகர்கள்

தொகுப்பாளினியாக சினிமா பயணத்தை தொடங்கி அதிகபட்ச குறும்படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன்.

காதலும் கடந்து போகும், வடசென்னை, இறைவி, ராட்சசன், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு மற்றும் ஜெயில் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு என ஒரு போஸ்ட் ஒன்று போட அதற்கு ரசிகர் ஒருவர் அப்படியே தலயை பார்த்துவிட்டு வாருங்கள் என கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு சரண்யா, அவருடன் நடித்துவிட்டே வந்துவிட்டேன், வலிமை படத்தில் என பதில் டுவிட் போட்டுள்ளார்.

படப்பிடிப்பு நடக்கும் விஷயத்தை நடிகை உறுதிப்படுத்த ரசிகர்கள் செம குஷி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!