சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் முன்னணி நிறுவனமாகும் சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது.

அதற்கு பிறகு சுமார் 8 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யை நடித்த சர்கார் வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தது. இந்த இடைவெளியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு செய்யவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் விநியோகம் செய்து வந்தார்கள்.

2018ஆம் ஆண்டிற்கு பிறகு சர்கார், பேட்ட, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்காக வழங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது தொடர்ந்து 5 முன்னணி நடிகர்களை வைத்து 5 பிரமாண்ட படங்களை தயாரித்து வெளியிடவுள்ளது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

1. சூர்யா – சூர்யா40

2. ரஜினிகாந்த் – அண்ணாத்த

3. தனுஷ் – D44

4. விஜய் – தளபதி 65

5. ராகவா லாரன்ஸ் – சந்திரமுகி 2

இதில் சூர்யா, ரஜினி மற்றும் தனுஷ் படங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.

விஜய் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், 90% உறுதியப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!