28 வருட சினிமா பயணத்தில் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்- இதுதான் முதன்முறையாம்

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மற்ற மாநிலத்திலும் தளபதியின் தீவிர வெறியர்கர் உள்ளனர்.

ஆந்திரா, கேரளாவில் அப்படிபட்ட ரசிகர்களை பார்த்திருப்போம், மாஸ்டர் படப்பிடிப்பில் கர்நாடகா ரசிகர்களையும் பார்த்தோம்.

தற்போது வருடா வருடம் ஒரு படமாவது ரசிகர்களுக்கு கொண்டாட கொடுக்கும் விஜய்யால் இம்முறை படம் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

வழக்கம் போல் அவர் பணியை முடித்துவிட்டார் கொரோனா வந்து கெடுத்துவிட்டது.

விஜய்யின் சினிமா பயணத்தில் 1996ம் ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 5 படங்கள் வெளியானது. இந்நிலையில் 2020ம் ஆண்டு தளபதி விஜய்யின் படம் வெளியாகாத ஆண்டாக மாறிவிட்டது.

மேலும் அவர் சினிமாவில் நடிக்க வந்து இத்தனை வருடங்கள் ஆன நிலையில் ஒரு வருடத்தில் ஒரு படம் கூட வெளியாகாதது இதுவே முதல் முறையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!